மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் சிறப்பு சலுகை
மத்தல சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு இன்று முதல் சிறப்பு சலுகை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதற்கமைய, இதுவரை வசூலிக்கப்பட்ட புறப்பாடு வரியை முற்றிலுமாக நீக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
மத்தல விமான நிலையம் வழியாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட 60 அமெரிக்க டொலர் புறப்பாடு வரி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள்
இந்த முடிவின் முக்கிய நோக்கம் மத்தல விமான நிலையத்திற்கு அதிகமான விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகளை ஈர்ப்பதாகும்.

இந்த வரிச் சலுகை இன்று முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.
இந்த நடவடிக்கை இலங்கை சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து திணைக்களம் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது