மட்டக்களப்பில் காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் விசேட திட்டம்
காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலான விசேட திட்டம் ஒன்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
நியுசிலாந்தின் வெளிநாட்டு அமைச்சின் நிதியுதவியின் கீழ் சிறுவர் நிதியத்தின் ஊடாக யுனிட்டி லங்கா அமைப்புடன் இணைந்து இந்த திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
சிறுவர்களை பாதுகாக்கும் விசேட திட்டம்
குறித்த திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று (27.03.2024) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டித் ஹோஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மாற்றமடைந்துவரும் காலநிலையிலிருந்து மிகவும் வறிய நிலையில் உள்ள சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஊடாக குளங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் சிறுவர்களுக்கான சுத்தமான குடிநீரை உறுதிப்படுத்தல், சுகாதாரத்தினை உறுதிப்படுத்தல் மற்றும் பாடசாலை மாணவர்களின் தேவைகளை உறுதிப்படுத்தல் என பல்வேறு வேலைத்திட்டங்கள் இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜி.ஜி.முரளிதரன் கலந்துகொண்டதுடன் சிறுப்பு அதிதிகளாக சிறுவர் நிதியத்தின் வியாபார அபிவிருத்திக்கான பணிப்பாளர் டினன்த தம்பாவிற்ற, கிரான் பிரதேச செயலாளர் க.சித்திரவேல், புனானை 23 ஆவது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் நிலாந்த பிரேமரத்ன, முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேச செயலகப்பிரிவுகளான கிரான் மற்றும் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுகள் இதன் கீழ் தெரிவுசெய்யப்பட்டு காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
















பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
