வடமாகாண சுற்றுச்சூழல் தொடர்பில் விசேட வேலைத்திட்டம்
வடமாகாணத்தில் விரைவில் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ தனபால தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
விசேட செயற்திட்டம்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“எதிர்காலத்தில் வடமாகாணத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நபர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு வடமாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த வடக்கு மாகாணத்தை உருவாக்குவது தனது நம்பிக்கையாகும்.
இனிவரும் நாட்களில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படும் என்பதுடன் பொதுமக்கள் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுகொள்கின்றேன்” என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
