ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலையில் விசேட பூஜை வழிபாடுகள் (Video)
ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் கீரிமலை கடற்கரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
தந்தையை இழந்தவர்கள் தமது பிதிர் கடன்களை செலுத்தும் விரதமாக கடலில் நீராடியுள்ளார்கள்.
இதேவேளை, மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவமும் இன்று கீரிமலை கடற்கரையில் நடைபெற்றுள்ளது. ஏராளமானான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை வழிபட்டு தீர்த்தமாடியுள்ளனர்.
ஆடி அமாவாசை விரதம்
ஆடி அமாவாசை விரதமானது இந்து சமயத்தை சேர்ந்த அனைவராலும் பக்தியுடன் அனுட்டிக்கப்படும் விரதம். மேலும், இந்த நாளில் இந்துக்கள் சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் தீர்த்தமாடி தம் மூதாதையர்களை, முக்கியமாக தந்தையை நினைவு கூர்ந்து விரதமிருப்பார்கள்.
சூரியனும், சந்திரனும் ஒன்றுபட்டு பூமிக்கு ஒரே திசையில் நேர்படும் நாட்கள், தந்தை வழி முன்னோர்களை நினைந்து வழிபட ஏற்ற நாட்களாக திகழ்கின்றது.

