அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட பணிப்புரை
அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவதில் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பின், அவற்றை உடனடியாக திருத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் இந்திய முதலீட்டு அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் விசேட பணிப்புரை

இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்பும் கலந்துக்கொண்டுள்ளார்.
இதன்போது, இந்திய முதலீட்டில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு தடையாகவுள்ள விடயங்களை கண்டறிந்து, அவற்றுக்கு உடனடி தீர்வு வழங்குமாறும் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்திக்கு இடையூறான சுற்றறிக்கைகள்

கடந்த அரசாங்கங்களால் காலத்துக்கு காலம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் அபிவிருத்திக்கு இடையூறாக இருக்குமாயின் அவற்றை உடனடியாக திருத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியுள்ளார்.


இந்த கலந்துரையாடலில், ஜனாதிபதி அலுவலக பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, மின்வலு, எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன உள்ளிட்ட ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan