இரகசிய தகவலால் வெவ்வேறு பகுதிகளில் வைத்து விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கிய இருவர்
வவுனியாவில் விசேட அதிரடிபடையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இன்று அதிகாலை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா - மடுக்கந்தை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்களால் மேற்கொள்ளபபட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கஞ்சாப் பொதிகளுடன் இருவர் வெவ்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரபுரம் பகுதியில் கைது செய்யபட்ட 16 வயது மதிக்கதக்க சந்தேகநபரிடமிருந்து 3.85 கிலோகிராம் கஞ்சாவினையும், கைது செய்யப்பட்ட மற்றுமொரு நபரான 61 வயது மதிக்கத்தக்க முதியவரிடம் இருந்து 1.890 கிலோகிராம் கஞ்சாவினையும் வவுனியா மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



