மத்தல வரும் விமானங்களுக்கு சிறப்பு சலுகை!
மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் தரித்து நிற்கும் அனைத்து விமானங்களிடமிருந்தும் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டணங்களை அறவிடாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக, மத்தல விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என சுற்றுலாதுறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
மத்தல விமான நிலையத்துக்கு விமானங்களை வரவழைப்பது குறித்து லயன் ஏயார், உக்ரேன் எயார் லைன், இன்டிகோ, எயார் இந்தியா, எயார் விஸ்தாரா, சலாம் எயார், எமிரேட்ஸ், மோல்டிவியன் எயார் ஆகிய விமானச் சேவைகள் நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது.
இதன் பயனாக எட்டு வௌிநாட்டு விமான நிறுவனங்கள் மத்தல விமான நிலையத்துக்கு விமானங்களை அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
