பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விதித்துள்ள கட்டுப்பாடுகள்
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நவம்பர் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, அனைத்து தேர்தல் வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரம் செய்ய இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. பொதுத்தேர்வு வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை செலுத்தும் வாய்ப்பு இன்றும் நாளையும் வழங்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு
கடந்த ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 01 மற்றும் 04 ஆகிய திகதிகளில் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு இன்று தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
கடமைகளை நிறைவேற்றும் இடங்கள் தொடர்பில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் மேற்கொள்ள முடியும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பிரசார நடவடிக்கை
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, நவம்பர் 11 நள்ளிரவு முதல் அமைதி காலம் தொடங்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
அதன் பின்னர் வேட்பாளர்களின் குடும்பத்தினர் வாக்களிக்க கோரும் நடவடிக்கையும் முடிவுக்கு வரும். வீடு வீடாகச் செல்வதும் சட்டவிரோதமான செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத ஸ்தலங்கள், மதகுருமார்கள் மற்றும் அவர்களின் மத நடவடிக்கைகளை பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது எனவும், வேட்பாளர்கள் பிரித் நூல் கட்டுவதை புகைப்படம் எடுத்து பிரசாரம் செய்ய கூடாது எனவும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.





பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
