உடலில் சிவப்பு கொப்புளங்கள் ஏற்படலாம்! குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
இலங்கையில் உள்ள பெற்றோர்களுக்கு சுகாதார அதிகாரிகள் அவசர அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
இதன்படி, கொழும்பு உள்ளிட்ட பல பிரதேங்களில் உள்ள சிறுவர்களுக்கு தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உடலில் சிவப்பு கொப்புளங்கள்

வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நோய் இலகுவாகப் பரவும் எனவும், ஒரு தடவை தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பரசிற்றமோல் போன்றவற்றைக் குடிக்கக் கொடுத்து வீட்டில் ஓய்வெடுக்க வைக்க வேண்டும்.
இது கொடிய நோயல்ல, 6 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan