அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை
அரச ஊழியர்களுக்கு ஊதியமின்றி விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மாயாதுன்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டு, செப்டம்பர் 6 ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை
இந்த விடயத்தை ஓய்வூதியத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிகபட்சமாக 05 ஆண்டுகள் வரை ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்கள் இந்த சிறப்பு விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குவது தொடர்பான அனுமதியொன்று அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.