இலங்கை வாழ் பெற்றோர்களுக்கு விசேட அறிவிப்பு
லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு கோவிட் தொற்றுடன் வரும் சிறுவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து சிறுவர்களை பாதுகாக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில், கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட 31 சிறுவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான 4 சிறுவர்கள் மாத்திரமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாடசாலைகளுக்கு அனுப்பும் போதும் வேறு பயணங்களுக்கு பிள்ளைகளை அழைத்து செல்லும் போதும் உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை கினிகத்ஹேன தேசிய பாடசாலையில் 8 சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 3 பேர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனால் அந்த மாணவர்கள் கல்வி கற்க 10 மற்றும் 11ஆம் வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசுடன் பேச எந்த நேரமும் தயார்! - சம்பந்தனின் அறிவிப்பு (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
