கொழும்பு கிராண்ட்பாஸின் ஒரு பகுதி தனிமைப்படுத்தல்
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் மஹவத்த வீதி, 233 தோட்டம் ஆகிய பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதியில் கோவிட் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட சின்ன ஊரணி, பலமீன்மடு கிராம சேவகர் பிரிவுகளும், காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட திருச்செந்தூர்,கல்லடி வெல்லூர் கிராம சேவகர் பிரிவுகள், நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமம் தவிர்ந்து ஏனைய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதிகள் முடக்கம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
