இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல்
இலங்கைக்கு வருகைத்தரும் பயணிகள், பூரண தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கோவிட் பரிசோதனை அவசியமற்றது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது.
இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவிக்கின்றார்.
இலங்கைக்கு வருகைத் தருவதற்கு முன்னர், பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளை செலுத்திக்கொண்டமையானது பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கருதப்படும் என்பதுடன், 18 வயதுக்கு குறைவானோர் ஒரு மருந்தளவை செலுத்திக்கொண்டமை பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இறுதி 6 மாத காலப் பகுதிக்குள் கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான எழுத்துமூல ஆதாரம் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கோவிட் தடுப்பூசியின் ஒரு மருந்தளவு போதுமானது என அவர் கூறுகின்றார்.
அத்துடன், கோவிட் தடுப்பூசியின் ஒரு மருந்தளவை மாத்திரம் செலுத்திக்கொண்ட நிலையில், 6 மாதங்களுக்கு முன்னர், கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், அவ்வாறான பயணிகள் கோவிட் பரிசோதனையை செய்ய வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.
பூரண தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத ஏனைய பயணிகள், இலங்கை்கு வருகைத் தருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் கோவிட் பரிசோதனை செய்வது கட்டாயமானது என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ குறிப்பிடுகின்றார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 46 நிமிடங்கள் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
