புதிய அரசாங்கத்தில் தனது பதவி தொடர்பில் சரத் பொன்சேகாவின் அறிவிப்பு
தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில்,
பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் எந்தவொரு முயற்சியையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்க நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.
மறைந்திருக்கும் மகிந்த பிறப்பித்த உத்தரவு: ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை |
அமைதியான, வன்முறையற்ற உள்நாட்டுப் போராட்டத்தின் மூலம் முழு இலங்கை தேசத்தின் முக்கிய கோரிக்கைகளில் நானும் நிபந்தனையின்றி நிற்கிறேன்.
காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் இருந்து நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், தேசத்தின் பேரப்பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் குரல் கொடுக்கும் மக்களின் கோரிக்கைகளை நான் மிகவும் உணர்கின்றேன்.
ஆரம்பத்தில் இருந்தே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துணிச்சலான போராளிக் குடிமக்களின் குழந்தைகளுக்கு நான் முழு மனதுடன் ஆசிர்வாதம் அளித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
