கிண்ணியா பிரதேச மேய்ச்சல் தரை விவகாரம்.. இடம்பெற்ற விசேட சந்திப்பு
வரையறுக்கப்பட்ட கிண்ணியா கால்நடை வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கிண்ணியா - சூரங்கல் பிரதேசத்தில் இன்று (24) இடம்பெற்றது.
நீண்ட காலமாக கிண்ணியா பிரதேச கால்நடை விவசாயிகளுக்கு மேய்ச்சல் தரை இல்லாத குறை, உயர் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக, கிடைத்திருப்பது குறித்து, விளக்கம் அளிப்பதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2876 ஹெக்டேயர் நிலம்
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக, தங்களுடைய கால்நடைகளுக்கு, மேய்ச்சல் தரையின்றி, பல்வேறு கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வந்த, கிண்ணியா கால்நடை விவசாயிகளுக்கு, 2876 ஹெக்டேயர் நிலம் மேய்ச்சல் தரைக்காக அடையாளப்படுத்தி, உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் 28ஆம் திகதி தீர்ப்பளித்துள்ளது.
இது சம்பந்தமாக, வரையறுக்கப்பட்ட கிண்ணியா பிரதேச கால்நடை கூட்டுறவு சங்க தலைவர் ஏ.எஸ். முஸ்தபா கருத்து தெரிவித்தார்.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக, அரசியல்வாதிகளை நம்பி, ஏமாந்து போன எங்களுக்கு, நீதிமன்றத்தின் மூலம், தற்போது நல்ல செய்தி கிடைத்திருக்கின்றது. பல ஆண்டுகளாக, அரசியல்வாதிகள் எங்களை, அவர்களுடைய தேவைகளுக்காக மாத்திரமே பயன்படுத்தினார்கள்.
மேலும், வரையறுக்கப்பட்ட கிண்ணியா கால்நடை வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எம். சி. சபருள்ளாவும் விளக்கம் அளித்தார்.





நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
