மகிந்த - ஜெய்சங்கர் இடையே விசேட சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று சந்தித்தார்.
அவரை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஜெய்சங்கர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி @PresRajapaksa அவர்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 20, 2024
இந்தியா இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. அவரது தொடர்ச்சியான ஆதரவுக்காக எமது பாராட்டுகள். https://t.co/xiVCLf2G8r
இருதரப்பு ஒத்துழைப்பு
“இந்தியா இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அவரது தொடர்ச்சியான ஆதரவுக்காக எமது பாராட்டுகள்” என்றும் ஜெய்சங்கர் தமது பதிவில் கூறியுள்ளார்.
மேலும், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் இந்திய வெளியுறவு அமைச்சர் சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் ஜி.எல்.பீரிஸ், நிரோஷன் பெரேரா, பழனி திகாம்பரம், ரவுப் ஹக்கீம் மற்றும் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
எனது இலங்கைக்கான விஜயத்தின்போது எதிர்க் கட்சித் தலைவர் @sajithpremadasa அவர்களையும் அவருடன் இணைந்திருந்த பேராளர்களையும் சந்தித்ததில் மகிழ்வடைகின்றேன். சந்திப்பில் இணைந்துகொண்டிருந்த திருவாளர்கள் ஜி.எல்.பீரிஸ், @eranwick, நிரோஷன் பெரேரா, பழனி திகாம்பரம், @Rauff_Hakeem மற்றும்… https://t.co/CFtJuTiGgz
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 20, 2024
இந்தியா-இலங்கை இடையிலான வலுவான உறவுக்கான சகல கட்சிகளதும் ஆதரவுக்கு எமது பாராட்டுகள். எம்மிடையிலான பங்குடைமை மேலும் மேலும் வலுவடைவது குறித்த வினைத்திறன் மிக்க கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |