பாதாள உலகக்கும்பல்களுடன் தொடர்புடைய பொலிஸாரைக் கண்டறிய விசேட விசாரணைகள் ஆரம்பம்
பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டுள்ள பொலிஸாரைக் கண்டறிவதற்கான விசேட விசாரணைகளை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இந்தோனேசியாவில் தலைமறைவாக இருந்த கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த உள்ளிட்ட பாதாள உலகக்கும்பல் தலைவர்களை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இரகசிய நகர்வு தொடர்பான தகவல் கசிந்துள்ளமை காரணமாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசேட விசாரணைகள்
குறித்த இரகசிய செயற்பாட்டுக்காக பொலிஸ் அதிகாரிகள் தனித்தனியாக வேறு நாடுகளின் ஊடாகவே இந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
எனினும் பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக ஏதோ ஒரு வழியில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்டவர்களுக்கு தகவல் கசிந்தமை காரணமாகவே அவர்கள் தங்கள் வசிப்பிடத்தை மாற்றி தலைமறைவாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பொலிஸ் திணைக்களத்தின் தகவல்களை இவ்வாறு பாதாள உலகக்கும்பல்களுக்கு வழங்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் தற்போதைக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்பைக் கொண்டிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் பதவியில் இருந்து இடைநிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
