றம்பொடை பேருந்து விபத்து விசேட விசாரணையை ஆரம்பித்த பொலிஸார்
கொத்மலையின் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்து குறித்து விசாரிக்க பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள், குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
குழுவின் அதிகாரிகள், பேருந்து விபத்து நடந்த இடத்தையும், விபத்தில் சிக்கிய பேருந்தையும் ஆய்வு செய்வதற்காக இன்று கொத்மலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர், மூத்த பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, சட்டத்தரணி ருவான் குணசேகர உள்ளிட்ட குழுவினர் கொத்மலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, விபத்தில் சிக்கிய பேருந்தை ஆய்வு செய்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள்
இதன்போது பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
