பெட்ரோலியம் இறக்குமதி தொடர்பான விசேட வர்த்தமானி
பெட்ரோலிய உற்பத்திகள்(விசேட ஏற்பாடுகள்)(திருத்த)சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானிக்கு அமைய சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு அவற்றின் தேவைக்கு அமைய எரிபொருளை பெற்றுக்கொள்ள அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
இந்த சட்டமூலத்திற்கு கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. விரைவில் அது நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri