இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி குறித்து முக்கிய கலந்துரையாடல்
கிழக்கு மாகாண விசேட சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்றுமுன் தினம் (13.03.2026) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமன, துறைசார் திணைக்கள பணிப்பாளர்கள், செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட உள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது
வீழ்ச்சியடைந்து வரும் சுற்றுலாத்துறை
இதன் போது கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்,
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை ஆனது பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

குறிப்பாக நேற்றைய தினம் இலங்கைக்கான 768 விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 வீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் ஏற்பட்ட குறித்த சூழ்நிலையில் இருந்து மீண்டு எழுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் கூடிய விரைவில் இந்த நிலைமை சீர் செய்யப்பட்டு சுமூகமான நிலைக்கு நாடு திருப்பமடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணி ஒதுக்கீடு
2026 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலே முன்னெடுக்கப்பட இருக்கின்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான திட்ட வடிவமைப்புகள் குறித்து இன்றைய தினம் ஆராயப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட இருக்கின்ற சுற்றுலா அபிவிருத்தி சார்ந்த வேலை திட்டங்கள் குறித்தும் அதற்கான முதலீடுகள் மற்றும் காணி ஒதுக்கீடு தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
குறிப்பாக காணிகள் ஒதுக்கீடு தொடர்பான வேறு அரச திணைக்களங்களது அனுமதிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
]
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri