தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்: மன்னாரில் விசேட கலந்துரையாடல்
தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்த மக்கள் மேடை நிகழ்வு மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
மார்ச் 12 இயக்கத்தின் மாவட்ட தலைவர் கொன்ஸால் வாஸ் தயாளராஜன் தலைமையில் இன்று இடம்பெற்ற குறித்த மக்கள் மேடை நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்கள் ,அரசியல் கட்சிகள்,பொது மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஆகிய
வற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் அகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
பல்வேறு பிரச்சினை
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசியல் பிரதி நிதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மண் அகழ்வு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது குறித்து மக்களினால் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் ஓரணியில் செயல்பட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |