இராணுவத்தின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Ministry of Defense Sri Lanka Dengue Prevalence in Sri Lanka Eastern Province Death
By Farook Sihan Jul 15, 2026 01:13 PM GMT
Report

நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்து வருவதுடன், உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றமையை கருத்திற்கொண்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வொலிவோரியன் பகுதியில் இன்று (15.07.2026) நுளம்பு களத்தடுப்பு மற்றும் வீட்டுப் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடித் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இந்தத் தீவிர கூட்டுத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு விசேட தொடருந்து சேவை

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு விசேட தொடருந்து சேவை

டெங்கு ஒழிப்பு

இன்றைய கள நடவடிக்கையின் போது, வொலிவோரியன் பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வெற்று நிலங்கள் அனைத்தும் அதிகாரிகளினால் அணு அணுவாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை | Special Dengue Eradication Operation With Military

இதன்போது, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் நீர் தேங்கியிருந்த இடங்கள் மற்றும் டெங்கு பரவலுக்கு வழிவகுக்கும் அபாயகரமான சூழல்கள் பல அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட நுளம்புப் பெருக்க இடங்கள் அனைத்தும் வீட்டு உரிமையாளர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் உடனடியாக அகற்றப்பட்டு, சுற்றுப்புறச் சூழல் துப்புரவு செய்யப்பட்டுள்ளது.

காலி சிறைச்சாலைக்குள் மர்ம நபர்கள் வீசிய பொதி! தீவிர விசாரணையில் பொலிஸார்

காலி சிறைச்சாலைக்குள் மர்ம நபர்கள் வீசிய பொதி! தீவிர விசாரணையில் பொலிஸார்

விழிப்புணர்வு 

எதிர்காலத்தில் இவ்வாறான டெங்கு அபாய நிலைமைகள் மீண்டும் ஏற்படாதவாறு பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு மற்றும் சுற்றுப்புறத்தைப் பேணுவது தொடர்பான அத்தியாவசிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களும் இதன்போது அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை | Special Dengue Eradication Operation With Military

டெங்கு அற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு பொதுமக்கள் அனைவரும் சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து செயற்பட வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களையாவது ஒதுக்கி, தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் நீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்திருக்குமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களை மிக அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது. 

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு விசேட தொடருந்து சேவை

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு விசேட தொடருந்து சேவை

GalleryGalleryGalleryGalleryGallery

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US