மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொவிட்-19 கட்டுப்பாட்டுக்கான விசேட குழு இன்று கூடுகிறது இதன்போது முக்கியமான சில விடயங்கள் குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறப்புக் குழுவின் கடைசிக் கூட்டத்தில், ஒக்டோபர் 31 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரத்தியேக வகுப்புகளை நேரில் மீண்டும் ஆரம்பிக்க அனுமதிப்பது குறித்து கூட்டத்தில் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri