வடக்கில் காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு

Kilinochchi Mullaitivu Vavuniya Northern Province of Sri Lanka
By Theepan Oct 10, 2024 02:49 AM GMT
Report

வடக்கில் காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண காணிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண காணி ஆணையாளர் மற்றும் மாகாணத்தில் உள்ள சகல மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,

ஏழை மக்களுக்கு உரிய காணிகள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். காணி வழங்குவதில் இடம்பெறும் முறைகேடுகள் அநீதிகள் தொடர்பாகவும், விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.அதற்குரிய பொறுப்பு அலுவலர்கள், தொடர்ந்தும் தவறு செய்யும் பட்சத்தில் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். சில மாவட்டங்களில் மட்டுமே காணி அலுவலர்கள் சிறந்த முறையில் பணியாற்றுகின்றனர்.

கொழும்பில் உயிரிழந்த பாடசாலை மாணவி: தாமரை கோபுர நிர்வாகம் வெளியிட்ட விளக்கம்

கொழும்பில் உயிரிழந்த பாடசாலை மாணவி: தாமரை கோபுர நிர்வாகம் வெளியிட்ட விளக்கம்

 

வடக்கில் காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு | Special Commission For Land Disputes In The North 

காணி தொடர்பான பிணக்குகள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் காணி தொடர்பான பிரச்சினைகள் அதிகமாக உள்ளதால் அங்கு விசேட கவனம் எடுக்க வேண்டும்.

காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு உருவாக்க வேண்டும். பொதுமக்களுக்கு எவ்வளவு தூரம் நாங்கள் உதவி செய்யலாம் என்ற நோக்கத்தோடு அரச உத்தியோகத்தர்கள் சேவையாற்ற வேண்டும். மிக விரைவாகவும், அன்பானதாகவும், தரமானதாகவும் சேவைகளை வழங்குதல் வேண்டும், அவ்வாறு வழங்க முடியாத பட்சத்தில் குறித்த காரணத்தை தெளிவாக தெரியப்படுத்த வேண்டும்.

அவ்வாறு தெரியப்படுத்தாமல் மக்களை மீண்டும் மீண்டும் அலுவலகங்களுக்கு வரவழைக்கக் கூடாது. சில அலுவலர்கள் நடைமுறைப்படுத்தக் கூடிய விடயங்களை செய்யாமலும் நடைமுறைப்படுத்தக் கூடாத விடயங்களை செய்கின்றனர்.

வடக்கில் காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு | Special Commission For Land Disputes In The North 

அரச அலுவலர்கள் தேர்வு 

அவ்வாறானவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றது. அவர்களுக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரச அலுவலர்கள் சரியானவர்களை தேர்வு செய்து காணிகளை வழங்காமை மக்களுக்கு செய்கின்ற துரோகம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொதுமக்கள் சிறிய சிறிய பிரச்சினைகளுக்காக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் உள்ள அலுவலகத்திற்கு வருகின்றனர்.

அவ்வாறான பிரச்சினைகளை தமது பிரதேசத்தில் உள்ள உரிய அலுவலகங்களுக்கு சென்று சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம்

முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம்

 

பாடசாலை மாணவி மாயம்: தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு தாய் கோரிக்கை

பாடசாலை மாணவி மாயம்: தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு தாய் கோரிக்கை


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US