நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு! வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது உணவுப்பொருட்களின் தரம், உணவுப் பொருட்களின் விலை குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

விசேட சுற்றிவளைப்பு

இதற்கமைய, உணவுப் பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்வோர் மற்றும் பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்வோரை தேடி இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 16 மணி நேரம் முன்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam