முச்சக்கர வண்டிகளுக்கு விசேட கட்டணம்
முச்சக்கரவண்டிகளை மேலதிக பொருட்களை கொண்டு அலங்கரிக்கும் செயற்பாட்டுக்கு இனிமேல் கட்டணம் அறிவிடப்படவுள்ளது.
முச்சக்கரவண்டிகளை மேலதிக பொருட்களை கொண்டு அலங்கரிப்பதற்காக கட்டணம் அறவீட்டின் கீழ் அனுமதி வழங்குவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆயிரம் ரூபா அறவிடப்படும்
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த திணைக்களம், முச்சக்கர வண்டி சங்கங்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, வீதியில் பயணிப்போருக்கு அனர்த்தம் அல்லது இடையூறு ஏற்படாத வகையிலான அலங்கரிப்புக்காக முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் அலுமினியத்திலான ஏணியை பொருத்த ஆயிரம் ரூபா அறவிடப்படும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.