பண்டிகைக்காலத்தில் ஊர்களுக்கு சென்ற மக்களுக்கு விசேட அறிவிப்பு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த விசேட சேவையானது இன்று (15.04.2024) மற்றும் நாளைய தினம் (16.04.2024) மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய, பயணிகளின் தேவைக்கு ஏற்ப விசேட பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
விசேட சேவை
இதேவேளை, தற்போதுள்ள தனியார் பேருந்துகளில் சுமார் 25% இன்றைய தினம் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அது மாத்திரமன்றி், தொடருந்து சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |