கொழும்பு புறநகர் பகுதியில் மூடப்படும் வீதி: பொலிஸார் விடுத்த அறிவித்தல்
கொழும்பு - இராஜகிரிய பிரதேசத்தில் வீதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிசார் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய, மத்திய வெலிக்கடை சந்தியில் இருந்து மாதின்னாகொடை சந்தி வரையான வீதி இன்று (01.07.2023)நள்ளிரவு முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் குழாய் பெருத்தும் நடவடிக்கை காரணமாக இவ்வாறு வீதி மூடப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மாற்று வீதிகள்

இதன்படி, குறித்த காலப்பகுதியில் இராஜகிரிய மத்திய வெலிக்கடை சந்தி, மொரகஸ்முல்ல சந்தி மற்றும் மாதின்னாகொடை சந்தி ஆகிய வீதிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan