அடுத்த வாரத்திற்கான கல்வி நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் அடுத்தவாரம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவித்தலொன்றை அறிவித்துள்ளது.
அதற்கமைய, மேல் மாகாண பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் என்பவற்றின் கல்வி நடவடிக்கைகளை அடுத்த வாரம் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
27ஆம் திகதி இறுதி தீர்மானம்
நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புற பாடசாலைகளின் செயற்பாடுகளை அப்பகுதி கல்வி அதிகாரிகள் தீர்மானிக்கலாம் எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தினுள் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்வரும் 25ஆம் திகதி மாகாண கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றவுடன்,27ஆம் திகதி இது தொடர்பில் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.