கொரோனா தடுப்பு பானம் பெற்ற சபாநாயகர்! சபையில் கேள்வியெழுப்பிய சஜித்
கேகாலை ஆயுர்வேத மருத்தவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனா வைரஸ் தடுப்பு பானத்தை சபாநாயகர் பயன்படுத்தி பார்த்தமை குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
சபாநாயகர் அதனை பயன்படுத்துவதற்கு முன்னர் தரச்சான்றிதழ் அதற்கு வழங்கப்பட்டதா என எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் அங்கீகாரமில்லாமல் மருந்துகளை பயன்படுத்துவது அதனை பயன்படுத்துபவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது வேடிக்கையல்ல இது மக்களின் உயிர்கள் தொடர்பான கேள்வி என சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்கட்சி தலைவரின் இந்த கேள்விக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த மாதம் கேகாலை ஆயுர்வேத மருத்தவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனா வைரஸ் தடுப்பு பாணத்தை பெற்றிருந்தனர்.
கேகாலை ஆயுர்வேத மருத்தவர் தம்மிக்க பண்டார நாடாளுமன்றத்தில் சபாநாயகரை சந்தித்து கொரோனா வைரஸ் தடுப்பு பானத்தை வழங்கினார்.
சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் இந்த பானம் நுகரப்பட்டது.
குறித்த கொரோனா வைரஸ் தடுப்பு பானம் சுகாதார அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு பொது நுகர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு தம்மிக்க பண்டார சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan