தொலைந்துப்போன பிம்பத்தை கட்டியெழுப்ப கோரும் சபாநாயகர்!
இலங்கை நாடாளுமன்றத்தின் தொலைந்துப்போன பிம்பத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அமைப்பின் கண்ணியத்தை நிலைநாட்டுவது அனைவரின் மிக புனிதமான கடமை என்பதை அனைத்து உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்..
மக்கள் இந்த நாடாளுமன்ற சபையின் மீது நம்பிக்கை இழக்கிறார்கள் என்றால், அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.
எனவே அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், வரவுசெலவுத்திட்டம் உட்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஒரு சுயாதீன ஆய்வு மற்றும் பகுப்பாய்வு அலுவலகத்தை அமைப்பதற்கும் சபாநாயகர் பரிந்துரை செய்துள்ளார்.
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam