நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய அர்ச்சுனா - சபாநாயகர் வெளியிட்ட தகவல்
நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அஷோக ரங்வல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அர்ச்சுனா அமர்ந்தமையினால் குழப்ப நிலைமை ஏற்பட்டது. இதன்போது அவர் வெளியிட்ட சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கமைய, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் தகவல்
நேற்று பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்த சபாநாயகர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

"தனி ஒரு நபராக அவரது அபிலாஷை என்னவென்று எங்களுக்குத் தெரியாது. அவரை பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் அபிலாஷை மிகத் தெளிவாக உள்ளது.
மக்கள் இன்று நாட்டில் அப்படியொரு விடயத்தை எதிர்பார்க்கவில்லை. அந்த மக்கள் வடக்கு, மேற்கு அல்லது கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் ஒற்றுமையுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என நாங்கள் நம்புகின்றோம்.
பேஸ்புக் கணக்கு
அது ஒரு தனியொருவரால் மேற்கொள்ளப்பட்டது என்பது எமக்கு தெரியும். அதுபற்றி அவரிடம் பேசி, அவரது அனைத்து பேஸ்புக் கணக்குகளையும் சரிபார்த்தோம். நாமும் அவருடன் பேசலாம், புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதிர்காலத்தில் இதை தெளிவுபடுத்துவோம்" என்றார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் செயற்படும் எனவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri