பிரித்தானியா பிரஜைகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஸ்பெயின்
கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பிரித்தானிய பிரஜைகள் எதிர் மறையான பிசிஆர் அறிக்கை அல்லது ஆன்டிஜென் சோதனை அறிக்கையை காண்பிப்பதன் மூலம் ஸ்பெயினுக்கு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாதா நாடுகளை சேர்ந்த தடுப்பூசி போடாத பயணிகள் சனிக்கிழமை முதல் நாட்டிற்குள் நுழையலாம் என்று ஸ்பெயின் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
இந்நிலையிலேயே, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பிரித்தானிய பிரஜைகள் எதிர் மறையான பிசிஆர் அறிக்கை அல்லது ஆன்டிஜென் சோதனை அறிக்கையை காண்பிப்பதன் ஸ்பெயினுக்கு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகள் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 18ம் திகதி நுழைவதற்கான மீதமுள்ள அனைத்து சர்வதேச கோவிட் பயணக் கட்டுப்பாடுகளையும் பிரித்தானியா நீக்கியிருந்தது.
ஆஸ்திரியா, கிரீஸ், சுவிட்சர்லாந்து, பல்கேரியா, குரோஷியா, லித்துவேனியா, ஸ்வீடன், செர்பியா, ஸ்லோவேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் இனி கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்ற நிலையில், பிற ஐரோப்பிய நாடுகளும் இதைப் பின்பற்றி வருகின்றன.
முன்னதாக, கோவிட் கட்டுப்பாடுகள், தடுப்பூசி சான்றிதழ் அல்லது வைரஸிலிருந்து மீண்டதற்கான ஆதாரத்துடன் மட்டுமே பிரித்தானியா பயணிகள் ஸ்பெயினுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.