விண்வெளி விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களின் சங்கமம் 2025
SLIIT NORTHERN UNIஆனது பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விண்வெளி விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களுடன் கூடிய SpaceFest 2025 கண்காட்சியினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியளவில் இருந்து மாலை 4.30 மணி வரை நடாத்தத் திட்டமிட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் இந்தக் கண்காட்சியினை SLIIT NORTHERN UNI இன் வளாகம் 1 (கந்தர்மடம் சந்தி) மற்றும் வளாகம் 2(பலாலி வீதியில் DAMRO இற்கு அருகில்)இல் பார்வையிடலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.
இந்தக் கண்காட்சியில் கீழ்வரும் விடயங்கள் உள்ளடங்குகின்றன.
1. வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 250+ பாடசாலை மாணவக்குழுக்களின் சுவரொட்டிக் கண்காட்சி
2. Internet of Things (IoT) கண்காட்சி
3. மெய்நிகர் உண்மை (Virtual Reality) அமர்வுகள்
4. Aeronautical கருத்தமர்வுகளும் கண்காட்சியும்
5. மாணவர்களுக்கான புத்தாக்க விளையாட்டுக்கள்
6. விண்வெளி வினாவிடை
7. இன்னும் பல விடயங்கள்
மேலதிக விபரங்களுக்கு 021 7534 807 இனை தொடர்புகொள்ளவும்.





