தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது நேற்றையதினம் (28) பல்கலைக் கழகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (27) சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 27 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
போராட்டம்
இவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட ஏனைய 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர் பகுதிகளில் மாத்திரமின்றி நாடு தழுவிய ரீதியில் பரவலாக வேட்புமனுக்கள் நிராகரிப்பு: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
