தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் இம்மானுவேல் க்ரெய்க் இடையே சந்திப்பு
அமெரிக்கா- பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் இம்மானுவேல் க்ரெய்க் (Emmanuel Kreike) தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனை சிநேகபூர்வ அடிப்படையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் புவியல் துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிரின் அழைப்பின்பேரில் இம்மானுவேல் க்ரெய்க் கடந்த (2025.06.03) ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்திருந்தார்.
கலந்துரையாடல்
இதன்போது, இரு தரப்பினரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இம்மானுவேல் க்ரெய்க் இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் டார்ஜிலிங்கில் உள்ள சவுத்ஃபீல்ட் கல்லூரி ஆகியவற்றின் இணைப்பில் நடைபெற்ற பன்னாட்டு பன்முகக் கல்வி மாநாட்டில் முக்கிய உரையாளர் ஆகப் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
