யஸ்மின் சூக்காவை முன்னிலையாகுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு
இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சாலி தாக்கல் செய்த அவதூறு மனுவின்கீழ், எதிா்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, தென்னாபிரிக்க மனித உாிமைகள் சட்டத்தரணி யஸ்மின் சூக்காவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மீண்டும் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட, ஏனைய இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராகவும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மீண்டும் அறிவித்தலை விடுத்துள்ளது.
ஏற்கனவே அனுப்பப்பட்ட அறிவித்தலின்படி, பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என நீதிவான்-ஏ.டி.சத்துரிக்கா டி சில்வாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போதே மீண்டும் அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமக்கு தீங்கிழைக்கும் வகையில், சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டப் (ITJP) பணிப்பாளா்- தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணியும் ஆர்வலருமான யஸ்மின் சூகாவின் இணையதளத்தில் வெளியான அறிக்கைகளுக்காக தமக்கு 1 பில்லியன் ரூபா நட்டஈடு தரப்படவேண்டும் என்று மனுதாரரான சாலி கோாியிருந்தாா்.
”அரச மருத்துவர் ஒருவரை காவலில் வைக்க வற்புறுத்தியதாகவும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்து தவறான சாட்சியம் அளிக்க மிரட்டியதாகவும், சூக்காவின் இணையத்தள அறிக்கைகளில் சுரேஸ் சாலியின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.”
இந்தநிலையில் 2020, ஜூன் முதலாம் திகதியன்று முதலாம் பிரதிவாதியான சூகா, தன்னைக் குறிப்பிட்டு, வெளியிட்ட அறிக்கைகளை 2வது பிரதிவாதி, சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இணையத்தில் பிரசுரித்ததாக மனுதாரா் குற்றம் சுமத்தியுள்ளாா்.
இதன்படி, 2வது மற்றும் 3வது பிரதிவாதிகள் இணையத்தளத்தில் பொய்யான, தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதற்கு காரணமாக இருந்ததாக மனுதாரா் தமது மனுவில் தொிவித்துள்ளாா்..

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
