இலங்கை படைப்பில் இணையும் தென்னிந்திய முன்னணி நடிகர்
யாழ்ப்பாணம் ஒரு பீனிக்ஸ். யாழ்பாணத்திற்குசுற்றுலா பயணிகள் வர வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வருவோர் நிச்சயமாக யாழ்ப்பாணத்தை வந்து பார்வையிட்டு செல்ல வேண்டும் என தென்னிந்திய நடிகர் தலைவாசல் விஜய் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கர்மா திரைப்பட படப்பிடிப்புக்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள தலைவாசல் விஜய் யாழ்.ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண இளைஞர்களின் முயற்சி
யாழ்ப்பாண இளைஞர்களின் முயற்சியில் உருவாகும் கர்மா எனும் படத்தில் நடிப்பதற்காக. வந்த எனக்கு அருமையான வரவேற்பு கிடைத்தது.
இங்குள்ளவர்கள் அன்பாக கவனித்துக்கொண்டார். நான் இங்கு யாழ்ப்பாண தமிழ் பேசி நடிப்பதில் தான் மிக கஷ்டப்பட்டேன்.
யாழ்ப்பாண தமிழ் மிக அழகானது. அதனை பேசி நடித்ததில் மகிழ்ச்சி. யாழ்ப்பாண தமிழ் பேச நீண்ட பயிற்சி கூட எடுத்தேன். இங்குள்ள கலைஞர்கள் திறமையானவர்கள். அவர்களிடம் தொழில் நேர்த்தியை பார்த்தேன்.
நிச்சயம் அவர்கள் ஒரு இடத்திற்கு செல்வார்கள் தங்கள் திறமையை அவர்கள் மென்மேலும் வளர்த்துக்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




