தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் கால நிலையில் ஏற்பட்ட மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள வளிமண்டல குழப்ப நிலை காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை அண்டிய தெற்கு அந்தமான் கடல் பிரதேசம், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வருகிறது.
இதன் காரணமாக பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும், 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுவது 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
அத்துடன் குறித்த கடற்பகுதியில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகம் கோரப்பட்டுள்ளது.



