மன்னாரில் ஆத்துமாக்கள் தினம் அனுஷ்டிப்பு (photo)
ஆத்மாக்கள் தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க மக்கள் மரணித்த தமது உறவுகளின்
கல்லறைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க மக்களும் நேற்று (02.11.2022) தமது உறவுகள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி
மன்னார் பேசாலையில் உள்ள கத்தோலிக்க சேமக்காலையில் நேற்று மாலை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன் போது பேசாலை மக்கள் உயிர் நீத்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல கத்தோலிக்க மற்றும் பொது சேமக்காலையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
பொருளாதார நெருக்கடி மிகுந்த சூழலிலும், மலர் கொத்துக்கள் வாங்கி, அவற்றை
கல்லறைகளில் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்காக மக்கள் பிரார்த்தனை
செய்தனர்.














16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
