ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூரசம்ஹாரத்தில் பெருமளவில் திரண்ட பக்தர்கள் (Photos)
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முருகனுக்கான கந்தசஷ்டி விரதம் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் ஐந்தாவது நாளான நேற்று (18) சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இதன்போது பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர்.
முருகப் பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையே நடைபெறும் போரை மையமாக கொண்டே சூரசம்ஹாரம் ஆலயங்களில் நடைபெற்றது.




ஸ்ரீ கல்யாண வேலவர் ஆலயத்தில் சூரன்போர்
இதேவேளை, முல்லைத்தீவு முள்ளியவளையில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வேலவர் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு நேற்று சிறப்புற நடைபெற்றுள்ளது.
முருகப்பெருமானுக்கு விசேட அபிசேகங்கள் இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க உள்வீதி வலம் வந்து பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கடாய் வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து சூரனை வதம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி கொடுத்துள்ளார்.
இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு
செய்துள்ளார்கள்.
மேலதிக தகவல்கள் - கீதன்
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின் சூரசங்கார நிகழ்வு நேற்று (18) வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இதன் போது முல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டப பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

பின்னர் முருகப் பெருமான் உள்வீதியூடாக வலம் வந்து பின்னர் வெளிவீதியுலா வந்து சூரனுடன் போர் புரிந்துள்ளார்.
இந்த உற்சவத்தினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ்ந்தனர். முருகப்பெருமானை தரிசித்த பக்தர்கள் இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
வல்வெட்டித்துறை வல்வை சிவன் கோயில்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை வல்வை சிவன் கோயிலில், சக்கரவாக பட்சியின் சூரபத்மன் வதைபடலம் நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றன.
வல்வை சிவன் கோயிலில் கிட்டத்தட்ட 80ஆண்டுகளுக்கு முன்பதாகவே பெரிய செயற்கையான சக்கரவாகபட்சி ஒன்று செய்யப்பட்டுள்ளதோடு சூரசம்ஹார நாளில் அவ்வப்போது போர் புரியவும் விடப்பட்டுள்ளது.

இந்த உற்சவத்தினை ஆலய பிரதம குரு த.நித்தியானந்தாக் குருக்கள் நடாத்திவைத்தார்.
இதனை காணுவதற்காக பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் புடைசூழ்ந்தனர்.
செய்தி - கஜிந்தன்











 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        