பிறந்த நாளில் மகனால் படுகொலை செய்யப்பட்ட தந்தை
மாத்தறை, அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் தந்தையின் பிறந்த நாளில், அவரது மகன அவரை கொலை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் வசித்து வந்த 81 வயதுடைய முதியவரே மகனின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையான குறித்த நபர் தனது தந்தையை கொலை செய்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கையில் நான் கண்ட மெய்சிலிர்க்க வைத்த தாக்குதல்..! காயமடைந்த சிறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்கள்
பிரேத பரிசோதனை
வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கு காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் பின்னர், சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.