தாய் மற்றும் சகோதரிக்கு இளைஞன் செய்த கொடூர செயல்
மொனராகல, வெல்லவாய பிரதேசத்தில் மகன் தனது தாயின் கையின் மூன்று விரல்களை மன்னா கத்தியால் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தாயின் விரல்களை வெட்டிய மகன் தனது சகோதரியையும் கத்தியால் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களால் விரல்கள் துண்டிக்கப்பட்ட தாயையும், காயமடைந்த சகோதரியையும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சை
ஆபத்தான நிலையில் இருந்த தாய் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான மகன் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடையவர் எனவும் அவர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri