நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பலர் கைது
நாடளாவிய ரீதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவரை பகுதியில் வைத்து 6000 மில்லி லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் தலா மூவாயிரம் மில்லி லீட்டர் கசிப்பினை வீதியால் கொண்டு சென்றவேளை காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.
அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் நூதனமான முறையில் கசிப்பை கொண்டுவந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (04.01.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிசாரால் அரியாலை மாம்பழம் சந்தியில் வைத்து கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
நெல் உமி மூடையில் நூதனமாக மறைத்து கொண்டு வரப்பட்ட கசிப்பே இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரையும், சான்றுப் பொருட்களையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: தீபன்
மன்னார்
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் இருந்து மேலும் ஒரு தொகுதி கேரள கஞ்சா போதைப்பொருள் நீதிமன்றத்தின் நுழைவு பகுதியில் இருந்து போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (04.01.2023) பதிவாகியுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே கடந்த நவம்பர் மாதம் கடத்தல் ஒன்றுடன் தொடர்புப்பட்டதாக மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் இரகசியமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று (04.01.2023) அதே டிப்பர் வாகனத்துக்குள் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 116 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா நேற்று புதன்கிழமை இரவு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: ஆஷிக்
வயலுக்கு மேச்சலுக்கு சென்ற ஏழு மாடுகள் சாவு சந்தேக நபர் கைது
பூம்புகார் கல்மடுப் பகுதியிலுள்ள வயல் ஒன்றில் மேய்ச்சலுக்கு சென்ற ஏழு மாடுகள் சாவடைந்துள்ளது இதனடிப்படையில் வயலின் உரிமையாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 14நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வயலுக்கு சென்ற உரிமையாளர் வயல் வாடியில் வைக்கப்பட்ட முப்பது கிலோ உரம் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் குழாய் பைப் என்பன திருட்டுப்போயுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்தி - ஷான்
கஞ்சாவுடன் இருவர் கைது
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவரை பகுதயில் 21 மற்றும் 22 வயதுடைய இருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஒருவரிடமிருந்து 600 மில்லிக்கிராம் கஞ்சாவும் மற்றையவரிடமிருந்து ஆயிரம் மில்லிக்கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அச்சுவேலி பொலிஸாரிம் பாரப்படுத்தப்பட்டனர். அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி - கஜி
கடலட்டை பிடித்தவர்கள் கைது
மன்னாரில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்த 09 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை (5) அதிகாலை மன்னார் அச்சங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கையின் மூலம் டைவிங் கியர், 01 டிங்கி படகு மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 168 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பல்வேறு வகையான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்காக மன்னார் தீவைச் சூழவுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் சட்ட
நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அமெரிக்கா-துருக்கி AMRAAM ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவின் பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தலா? News Lankasri

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
