ஒரே நாளில் இரத்து செய்யப்பட்ட 15 தொடருந்து சேவைகள்! வெளியான முக்கிய காரணம்
நாட்டில் இன்று(26) இயக்கப்படவிருந்த சுமார் 15 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து பிரதி பொது மேலாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''தொடருந்து சாரதிகள் சுகயீன விடுப்பு அறிவித்ததால் தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன் இன்று காலை பல பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சுகயீன விடுப்பு
இந்த தொடருந்து சேவை, தொடருந்து சாரதிகளின் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு பராமரிக்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் அவர்கள் தங்கள் தேவைகளுக்காக விடுப்பு கோரினாலும், தொடருந்து துறையால் அந்த விடுப்பை வழங்க முடியாது.
எனவே, அவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப சுகயீன விடுப்பைப் முறைப்பாடு அளித்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.”என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
படத்திற்கு நல்ல வரவேற்பு.. ஆனால், நெட்டிசன்களிடம் திட்டு வாங்கும் நடிகர் ஜீவா.. காரணம் என்ன Cineulagam
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri