தமிழீழத்தை உருவாக்க செயற்படும் சில கட்சிகள்! மட்டக்களப்பில் பகிரங்க குற்றச்சாட்டு
பல்வேறு பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமானது பிள்ளையான் போன்றவர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை மேற்கொண்டதே தவிர எந்தவித அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சுபிட்சத்தின்நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டு அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
பிள்ளையான் முதலமைச்சராக இருந்த கால பகுதியில் இந்த பகுதிகளில் பாரியளவிலான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் பொய்களைக்கூறி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அவரை பழிவாங்குவதில் குறியாக இருந்தார்களே தவிர அபிவிருத்திகளை நோக்காக கொண்டு செயற்படவில்லை.
இங்கு சில கட்சிகள் இருக்கின்றன. அவை கருத்துத் திணிப்பு செய்து தங்களுக்கான அரசாங்கத்தினை உருவாக்க வேண்டும், தமிழீழத்தினை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வகையில் செயற்பட்டு வருகின்றன.
ஆனால் இங்குள்ள வியாழேந்திரன், சந்திரகாந்தன் போன்றவர்கள் மக்கள் பிரச்சினைகளை உண்மையாக அடையாளம் கண்டு அவற்றினை தீர்க்ககூடிய மக்கள் பிரதிநிதிகளாக முதுகெழும்புள்ள அமைச்சர்களாக செயற்பட்டு வருகின்றனர்.
இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றபோது அந்த யுத்ததினை நடாத்திய பிரபாகரன் போன்ற தலைவர்கள் தங்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு கல்வி கற்பதற்கு அனுப்பிவிட்டு சுகபோக வாழ்க்கையினை அனுபவித்த அதேநேரத்தில் இங்குள்ள அப்பாவி இளைஞர்கள் கழுத்தில் சயனைட் வில்லைகளை அணிந்து யுத்தம் செய்தார்கள்.
ஆனால் துப்பாக்கி முனையினால் செய்யமுடியாதவற்றினை பேனை முனையினால் செய்ய முடியும் என்பதை நீங்கள் வியாழேந்திரன், பிள்ளையான் ஆகியோருக்கு வாக்களித்ததன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளீர்கள்.
அவர்கள் சார்பான அனைத்து விடயங்களையும் செய்வதற்கு நாங்கள் தயாராகயிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.











யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
