நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்டாய தனிமைப்படுத்தலில்!
அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஷ்வரன், நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் அவர்களின் வீடுகளிலேயே கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழ் ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
இதையடுத்தே அவர்களும் கட்டாயசுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.