ஈராக்கை பூர்வீகமாக கொண்டவர்கள்தான் யூதர்கள்!! வியப்படையவைக்கும் சில வரலாற்றுத் தகவல்கள்
மத்தியகிழக்கு பிரச்சனை என்பது யாராலும் தீர்த்து வைக்க முடியாத சிக்கல்கள் நிறைந்த ஒரு பிரச்சனை என்பது அனைவருக்கும் தெரியும்.
ஒரு பிரச்சனை ஒருபக்கம் தீர்ந்து கொண்டு செல்ல மற்றொரு பிரச்சனை புதிதான வேறொரு பக்கத்தில் இருந்து திடீரென்று உருப்பெற்றுவிடும்.
ஏன் என்பதற்கு பல காரங்கள் இருந்தாலும், அந்த மக்களின் மதம், மரபணு என்பன ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.
ஆனால், உண்மையிலேயே மத்திய கிழக்கில் உள்ள சமூகக்கூட்டங்களின் வரலாற்றை எடுத்து நோக்கினால், அவர்கள் ஒருவருடன் மற்றவர் பின்னிப்பிணைந்த பல சம்பவங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றன.
இஸ்ரேல், யூதர்கள் முதற்கொண்டு மத்திய கிழக்கில் உள்ள நாடுகள், சமூகக் கூட்டங்கள் தொடர்பான சில சுவாரசியமான தகவல்களை சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்: