சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு: 96இற்கும் மேற்பட்டோர் பலி
சோமாலியா நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 96இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, சோமாலியாவில் அவசர நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பாதிப்பு
முன்னரே ஆப்பிரிக்க அமைப்பான அல் ஷபாப்புக்கும் சோமாலியா அரசு படைகளுக்கும் நடந்து வரும் மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள், இந்த வெள்ளத்தினாலும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையிலும் 2,50,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
எல் நினோ நிகழ்வின் காரணமாக, சோமாலியாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 96க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.
அங்கிருந்து வரும் தகவலின் படி, ஷபல்லே (Shabelle) நதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால், பெலட்வைன் (Beledweyne) நகரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இதனால் சோமாலிய எத்தியோப்பிய எல்லையில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
