மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் நீண்ட கால நீர்க்கசிவு பிரச்சினைக்கு தீர்வு
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதான நீண்ட காலமாகவிருந்த நீர்க்குழாய் ஒன்றில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, அங்கு விஜயம் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உத்தியோகஸ்த்தர்கள், நீர்க் கசிவைக் கட்டுப்படுத்தி சீர்செய்வதற்குரிய பணியை முன்னெடுத்துள்ளனர்.
நீண்ட காலமாக கசிவு
இந்நிலையில், நீண்ட நாட்களாக அப்பகுதியில் நீர்கசிவு ஏற்பட்டமை தொடர்பில் தமது கோரிக்கைக்கு ஏற்ப குறித்த இடத்திற்கு விரைந்து நீர்க் கசிவைக் கட்டுப்படுத்துவதற்கான உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினருக்கு அப்பகுதி மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |